ஒரு குளக்கரையின் அருகில் இருந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது.
ஒருநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை எலியின் காலுடன் சேர்த்து கட்டிக்கொண்டது. அப்போது மேலே பறந்து கொண்டிருந்த பருந்து ஒன்று இவைகளைப் பார்த்து கொத்த வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது.
அதன் உடல் மேலே மிதந்த போதும் அதனுடைய கால்கள் தவளையுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது.
அந்த சமயம்...தண்ணீரின் மீது சுண்டெலி செத்து மிதந்ததைப் கண்ட பருந்து கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது.
அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் பருந்தின் பிடியில் சிக்கியது. இரண்டு விருந்து கிடைத்த சந்தோசத்தில் பருந்தானது தவளையையும் கொன்று தின்றது.
நாம் அறியும் நீதி:
நாம் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன் அதற்கு அவர்கள் தகுதியானவரா என்று யோசிக்கவேண்டும். இல்லையேல் தவளைக்கு நேர்ந்த கதிதான் நமக்கும் ஏற்படும்
.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Video
Curtalam
No comments :
Post a Comment